Sunday, June 29, 2008

சேகுவேரா பற்றி


நன்றி,
நண்பன், திரு. மணி செந்தில் அவருக்கு,

சேகுவேரா மீதான பொங்கிஎழும் பற்று...
நமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேராமட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….-தோழர்.பிடல் காஸ்ட்ரோ..சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்விழ துவங்கியது......முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது...அந்த ஒரு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர போதுமானதாக இருந்தது.....அவர் எல்லா சர்வாதிகாரங்களுக்கும் சவாலான சாகசக்காரராக எனக்கு தோற்றமளித்தார்.....அதுவும் அந்த புகைப்படத்தில் அவர் காட்டும் அலட்சியம் உள்ளடக்கிய கம்பீரம் உலகப் புகழ் வாய்ந்தது.ஒரு தனி மனிதன் மீது பார்த்தவுடன் பற்று வர அவரது முகப் பொலிவும்,தோற்றக் கவர்ச்சியுமே போதுமான அம்சங்கள் என்ற வகையில்எடுத்த வுடன் சேகுவேரா எனக்கு பிடித்த ஆளுமை ஆனார்....பிறகு திருச்சி சட்டக்கல்லூரியில் நான் பயின்ற போது அங்கு ஒரு கருத்தரங்கிற்குவந்த ஒரு வெளிநாட்டவர் அணிந்திருந்த சட்டையில் சேகுவேரா படம் பார்த்தேன்...அதுக் குறித்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு புரட்சியாளர்என்ற தகவலையும்,கியூபா நாட்டில் எழுந்த புரட்சியின் கதாநாயகன் என்றும் தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.பிறகு சேகுவேராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினேன்.பிறகுவிடியல் பதிப்ப்பகம் வெளியிட்டு உள்ள சேகுவேரா-வாழ்வும்,மரணமும் என்றநூலை வாங்கினேன்…….அது எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது….என் மாமா நான் ஆசைப்படுவதை எண்ணி அந்த புத்தகத்தை வாங்கிகொடுத்தார்…. ஒரு மூன்று மாதக் காலம் நான் அந்த புத்தகமும்,கையுமாகவே அலைந்தேன்..என் திருமண நாளன்று கூட கிடைத்த சிறுஒய்வில் கூட படித்துக்கொண்டிருந்தேன். முதலிரவு முடிந்து பின்னிரவில் எனக்கு ஏற்பட்ட விழிப்பில் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன்….எனக்கு புதுமனைவி மீது இருந்த காதலை விட சேகுவேரா என்ற அந்த மாபெரும் புரட்சிக்காரனின் மீது இருந்த பற்று மிக அதிகமாக இருந்தது…….



சேகுவேரா பிடிப்பட்ட பொழுதுகளை படித்த போது விம்மி வெடித்து அழுதேன்….அவர் சுட்டுக் கொல்லப் பட்டதை படித்துவிட்டு எனக்கு ஏற்பட்ட கடுமையான துயர் என்னை கடுமையான காய்ச்சலில் வீழ்த்தியது……அப்படிப் பட்ட ஒரு புரட்சிக்கரமான ,அழகு மிளிர்ந்த , இளம் ஆளுமை ஏகாதிபத்திய கூலிப் படைகளால் சுட்டுக் கொள்ளப் பட்டது இன்னும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.அவர் எதற்காக மரணத்தை நோக்கி நடந்தார்..? எந்தத் தேவை அவரை அவசர அவசரமாக சாவுக்குழிக்குள் தள்ளியது? …..விடை தேடிப் பார்த்தால் நாம் யாருமே உணர்ச்சி வயப்படாமல் இருக்கமுடியாது…..உலகம் முழுக்க உள்ள எளிய மக்கள் அனைத்து தளைகளில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றும் ,அதற்கு உலகளாவிய புரட்சி நிகழ வேண்டும் என அவர் விரும்பினார்.அதன் காரணமாகவே ….கியூபா நாட்டில் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,தனக்கு இருந்த புகழ்,செல்வாக்கு,குடும்பஉறவுகள்,செல்வம் ,அனைத்தையும் விட்டு விட்டு இரவோடு இரவாக பொலிவியா சென்றார்……அவர் புரட்சிக்காரனாக ஆனதில் சூழ்நிலைக்கு எந்த பங்கும் இல்லை. மாறாக சக மனிதர்களின் மீது அவர் வைத்த அளவற்ற பற்றே காரணமாக திகழ்ந்தது.(தொடரும்……)

சேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடுதென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்நாளில் முக்கிய திருப்பமாகும்….அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்….சே மற்றும் அல்பெர்தோ கிரானடோவின் நாட்குறிப்புகளை பயன் படுத்தி வால்டர் சாயேஸ் என்பவர் THE MOTOR CYCLE DIARIES என்ற உலகப் புகழ்ப் பெற்றபடம் தயாரித்தார்..அந்தப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன்…..அற்புதமான ,இயற்கை சுழலில் படம் பிடிக்கப் அப்படம் காண்போரை நெகிழ்ச்செய்யும் அனுபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் .அல்பர்தோ கிரானாடோவின் பயணக்குறிப்புகள் தமிழில் ஜி.குப்புசாமி மொழிப் பெயர்ப்பில் ‘சேகுவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது…..(வ.உ.சி.பதிப்பகம் வெளியீடு விலை:ரூ.100/-)சேகுவேரா ஒரு காவிய நாயகனுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார்.அவரின் மிக கவர்ச்சியான முகம் ,கள்ளங்கபட மற்ற அவரின் பார்வை,நட்பை கொண்டாடும் அவரின் புன்னகை, இவை அனைத்துமே அவரின்புகழை மேலும் உயர்த்தி சென்றன……அது மட்டுமல்ல அவரின் சமரசம் ஏதும் அற்ற புரட்சிக்கர மனநிலை யாருக்கும் கிடைப்பது அரிது…ஒரு புரட்சிக்காரனின் தேவை என்ன என்பதை அவரே கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்…..“ஒரு புரட்சிக்காரனின் தேவை எதுவென்றால்1.வெகு நடப்பதற்கும், ஒடுவதற்கும் ஏதுவான வலிமையான கால்கள்2.தூக்கும் போது உறுத்தாத எளிய வாழ்விற்கு போதுமான, இன்றியமையாத பொருட்களை உள்ளடக்கியதுமான சிறிய சுமை.............3.சிறிதளவே சாப்பிட்டாலும் தாங்கும் பிச்சைக்காரனின் வயிறு….இதைவிட யார் புரட்சிக்காரனின் தேவைகளை யார் தெளிவாக சொல்லிவிட முடியும்?......


இதைவிட அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி என்பதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது..தீவிர ஆஸ்துமா நோயின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதே வேகத்தில் ஏகாதிபத்திய சக்திகளை தாக்கிகொண்டிருந்தார் என்பது மானுட சமூகம் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும்,போர் மனநிலையையும் ஒரே சமயத்தில் பெற்றிருந்தார் என்பது சிறப்பு…(தொடரும்)


சேகுவேரா....ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,,சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்விற்று தீர்கின்றன... அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்...சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்...அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி...இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர வைக்கிறது.ஒரு மரணத்தின் மதிப்பு இவ்வளவு தானா...? என்று சிந்திக்க வைக்கிறது அவரது முகம்..ஓரு புரட்சிக்காரனின் பணியை வெகு நேர்த்தியாக செய்தார் சே.அவர் மரணத்தின் வாயிலில் நின்று சொன்ன வார்த்தை "நான் இன்னும் இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறேன்"ஆமாம்..உண்மைதான் ..சே என்றும் தேவைப்படுகிறார்


.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..
தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்...நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்...அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு ......கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே....அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா...? இல்லை.சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே.....மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே...அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே...பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது...மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்...அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை.....09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்...தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல....எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.....செவ்வணக்கம்...(தொடரும்)

2 comments:

ஜெபா said...

Dai, enaga irunthu itha sutta....

by jeba...

இசைச்செல்வன் said...

ஏல ஜெபா இவன் நம்ம பயலா?

பெரிய்ய ஆலா இருப்பான்போலயே.....